புதிய இயந்திரம் கையளிப்பு

0
191

மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கு வருகின்ற நோயாளர்களின் விபரங்களை இலகு முறையில் நிகழ்நிலை மூலம் பதிவு செய்வதற்கான இயந்திரம், இன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்டும் மட்டக்களப்பு பாடு மீன் லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ்.புவனேஸ்வரன் தலைமையினால் உறுப்பினர்கள் குறித்த இயந்திரத்தினை வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கத்திடம் கையளித்தனர்.
கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்ட மோ இயந்திரம் மூலம் வெளி நோயாளர் பிரிவில் நோயாளர்களின் பதிவு ,மருந்து வழங்கல், வைத்தியரை சந்தித்தல் ஆகியவற்றினை இலகுபடுத்த முடியும்.
இயந்திரத்தை கையளிக்கும் நிகழ்வில் வைத்தியசாலை நிர் வாக வைத்திய அதிகாரிகள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.