புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

0
62

புதிதாக கடற்றொழில் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட சந்திரசேகரன் இன்றைய தினம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அதன் சேவை நிலைமைகளை ஆராய்ந்தார்.வடமாகாணத்தின் முக்கியமான மருத்துவ சேவை மையமாக விளங்கும் யாழ் போதனா வைத்தியசாலை தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வருவதுடன் அந்த சேவையை நிறைவேற்றும் மருத்துவர்கள் தாதியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் மிக அத்தியாவசியமான சேவை வழங்கும் நிறுவனத்தின் சேவையை எப்போதும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை நேரடியாக கேட்டறிந்த அவர் சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளத் தீர்மானித்தார்.இதே நேரத்தில் யாழ் போதனா வைத்தியசாலை அளிக்கும் சேவையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

‘மனித வாழ்வின் மதிப்பை உயர்த்தும் இவ்வைத்தியசாலையின் ஒவ்வொரு உத்தியோகத்தரும் உண்மையில் நம் சமூகத்தின் நாயகர்கள்’ என்று கூறினார்.மேலும் சுகாதார அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ அவர்களும் விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.