புதிய சுற்றுச்சூழல் அபாயத்தில் இலங்கை!

0
163

நாட்டின் சில மாவட்டங்களில் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் சிரேஷ்ட புவி சரிதவியல் நிபுணர் சரத் பிறேமசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம் மாவட்டங்களில் காற்றில் தூசு துகள்களின் செறிவு 100 – 150ஆகக் காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காற்றில் தூசுதுகளின் செறிவு 100இற்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்நிலையில், தெற்காசிய நாடுகளில் அதிகரித்துள்ள வளிமாசடைவு காரணமாக இலங்கையும் இந்தப் பிரச்னை அதிகரித்துள்ளது.

சுவாச கோளாறுடையவர்களை அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.