ஆறு புதிய தூதுவர்கள், ஒரு உயர்ஸ்தானிகர், இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஒரு நியதிச்சட்ட நிறுவனத்தின் தலைவரின் நியமனத்துக்கு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக திருமதி எஸ்.ஏ.பி.பி. சேரம் பெயரையும், கட்டார் குடியரசுக்கான இலங்கை தூதுவராக திருமதி ஆர்.எஸ்.கே. அஸாட் பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக திருமதி எஸ்.கே. குணசேகர மற்றும் எகிப்துக்கான இலங்கை தூதுவராக ஏ.எஸ்.கே. செனவிரத்ன ஆகியோரின் பெயர்களும் உயர் பதவிகள் பற்றிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கை தூதுவராக என்.எம். ஷஹீட் , பஹ்ரைன் இராஜ்ஜியத்துக்கான இலங்கை தூதுவராக திருமதி வை.கே. குணசேகர மற்றும் நியூஸிலாந்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.பி. வல்பில கமகே ஆகியோரின் பெயர்களும் உயர் பதவிகள் பற்றிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுற்றாடல் அமைச்சின் புதிய செயலாளராக பி.கே.பி. சந்திரகீர்த்தி மற்றும் கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக எஸ். வீரசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி டி.டீ.கே. பேர்னாட் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரிஷாட் பதியுதீன், தலதா அத்துகோரல மற்றும் உதய கம்மன்பில ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.