புதையல் தோண்டிய இருவர் கைது!

0
11

வவுனியா, புளியங்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றத்துக்காக இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மரதன்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பிரதேச பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சந்தேகநபர்கள் மரதன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 40 இலிருந்து 52 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 

மேலதிக தகவல்களை மரதன்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.