புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்ட பேரீச்சம் பழம் இன்று மட்டக்களப்பு
காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் வைத்து பள்ளிவாயல்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீPதர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின்
கிழக்கு மாகாண பிராந்தி அலுவலக பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்.சியாட் ஆகியோர் கலந்து கொண்டு பேரீச்சம் பழங்களை வழங்கினர்.
காத்தான்குடி மற்றும் அதனை அண்டியுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட
59 பள்ளி வாயல்களுக்கு தலா ஒரு பள்ளி வாயலுக்கு 20 கிலோ வீதம் பேரீச்சம் பழங்கள் பகிரப்பட்டன.
நிகழ்வில் காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் பிரதி தலைவர் வஹாப், முன்னாள் தலைவர் மௌலவி ஆதம் லெவ்வை உட்பட பள்ளி வாயல் நிர்வாகிகளும்
கலந்து கொண்டனர்
Home கிழக்கு செய்திகள் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.