கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் புன்சர அமரசிங்க, இன்று கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட விரிவுரையாளர், 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில், பொய்யான தகவல்களை வெளியிட்டதாக, அவர் கைது செய்யப்பட்ட நிலையில், பிணை வழங்கப்பட்டுள்ளது.