கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில்வேக்கு அருகில் புறாக்களை விற்பனைச் செய்யும் கடை நடத்தி வரும் 41வயதான நபரொருவர் மீது ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரில், ஒருவர் துப்பாக்கித்தாரி பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நளீம் நிஷார் (வயது 41), கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது,
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு பாதுகாப்பு தலைக்கவசங்கள், கொட்டாஞ்சேனை மட்டி பூங்கா பகுதியில் இருந்து பொலிஸாரினால் அன்றையதினமே கைப்பற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.