பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்களை அரசு செயற்படுத்தியுள்ளது -ஜனாதிபதி

0
154
நாட்டின் பொருளாதாரத்திற்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கும் வகையில், சமத்துவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு தேவையான திறன்களுடன் வலுவூட்டும் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில், எழுத்தறிவு பெற்ற இலங்கைப் பெண், தொழில்ரீதியாக நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதாகவும், எனவே இது தேசத்தின் பலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.