பெண்கள் மற்றும் இளைஞர் வலையமைப்பின் நிலைத்தன்மை தொடர்பில் மட்டக்களப்பில் செயலமர்வு

0
112

பெண்கள் மற்றும் இளைஞர் வலையமைப்பின் நிலைத்தன்மை பற்றிய கலந்துரையாடலும் செயலமர்வும் மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ இயக்க மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.


மாவட்டத்திலுள்ள மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கள உதவியாளர்கள், சிறுவர் உரிமைகள் அபிவிருத்தி அலுவலர்கள், சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், இளைஞர் சேவைகள் மன்ற அலுவலர்கள் பெண்கள் மற்றும் இளைஞர் வலையமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் செயலமர்வில் பங்கேற்றனர்.


சமூகத்தை வழிநடத்த இளையோரையும் பெண்களையும் உள்ளடக்கிய சமூக வலையமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வருவதாக சேர்க்கிள்
இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர்நிகழ்வின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.