பெரமுன ஆதரவாளர்களுக்காகவே புதிய அரசியல் சக்தி உருவாக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உண்மையான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் நாங்கள்தான். முடிந்தால் கட்சியில் இருந்து எங்களை நீக்கிக் காட்டுங்கள் என டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை சவால் விடுத்துள்ளது
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாட்டில் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. ஆனால், இராஜாங்க அமைச்சு நியமனம் இடம்பெறுகின்றது என தெரிவித்தார்.
‘என்ன நடக்கின்றது எனத் தெரியவில்லை.
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், அநாதவராக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்காகவே நாம் புதிய அரசியல் சக்தியை உருவாக்கியுள்ளோம்.
எமது முடிவில் எந்தத் தவறும் இல்லை.
கட்சியை விட்டு எங்களை நீக்கினால் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம்.
முடிந்தால் நீக்கிக் காட்டுமாறு சவாலும் விடுக்கின்றோம்.
ஏனெனில், உண்மையான சிறீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நாங்கள்தான்.
கட்சிகளின் தனித்தும் மற்றும் கொள்கைக்காக நாமே முன்னிலையாகியுள்ளோம்’ என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.