பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்!

0
160

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பெரும்பாலான பிரதேசங்களில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பிற்றபகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மின்னல் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.