பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

0
127

டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டண திருத்தம் எதுவும் இடம்பெறாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் விலை அதிகரிப்பு பஸ் கட்டண திருத்தத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். அக்டோபர் 17 ஆம் திகதி டீசல் விலை லீற்றருக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டு, நேற்று இரவு 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லீற்றர் டீசலின் புதிய விலை 430 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.