பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பேருந்து தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணியளவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
பேருந்துக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மேலும் கட்டணத் திருத்தம் குறித்து இங்குதான் முடிவு செய்ய வேண்டும்.
அதன்படி இன்று பேச்சுவார்த்தைக்கு பேருந்து சங்க பிரதிநிதிகள் வந்தனர்