போக்குவரத்து சபைக்கு (Sri Lanka Transport Board) சொந்தமான பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஏழு பேர் ஆனமடுவ (Anamaduwa) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பத்துளுஓயா, கிரியங்கள்ளிய, பங்கதெனிய மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.