பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே கடுகதி ரயிலின் இயந்திரத்தில் இன்று திங்கட்கிழமை பகல் வேளையில் திடீரென தீப்பிடித்துள்ளது.
ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் வைத்தே ரயிலின் பின் புறத்திலுள்ள இயந்திரத்தில் தீப்பிடித்துள்ளது.
ஹப்புத்தளை ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் பொலிஸார் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.
இந்நிலையில், ரயில் பயணம் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமடைந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.