பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிரடி தீர்மானம்

0
194

பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களையும், போதைப்பொருள் வர்த்தகர்களையும் கைதுசெய்வதற்கு, நேற்று முதல் விசேட நடவடிக்கையை முன்னெடுக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கூட்டம் ஒன்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இடம்பெற்றது. அண்மைய நாட்களில், அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பொலிஸ் உயர் அதிகாரிகள் குறித்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், நாடுமுழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 25 இற்கும் அதிகமானார் உயிரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.