பொரளை துப்பாக்கிச்சூடு; மூன்று பேர் கைது!

0
5

கொழும்பு, பொரளை சஹஸ்புர வீடமைப்பு தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டக்கொடை மற்றும் பொரளை பகுதிகளை சேர்ந்த 24, 25 மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு 72 மணிநேர தடுப்புக்காவலில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேரில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.