சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.
ஆகவேஇ பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த அனைவரும் இனி கடுமையாக உழைக்க வேண்டும் என போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
காலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்இ
பாரிய மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த ஓர் ஆண்டு காலமாக எதிர்கொண்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டோம். இனி பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதி தொகையை போக்குவரத்துத்துறைக்கு பயன்படுத்த முடியாது. இந்த மாதம் அரச சேவையாளர்களுக்கு சம்பளம்இ சமுர்த்தி கொடுப்பனவு உட்பட சமூக நல பணிகளுக்காக 196 மில்லியன் ரூபாய் செலவாகும்.
ஆனால்இ அரச வருமானம் 173 மில்லியன் ரூபாயாக காணப்படுகிறது. ஆகவேஇ இந்த மாதத்துக்கான அரச செலவுக்கும்இ அரச வருமானத்துக்கும் இடையில் 23 மில்லியன் ரூபாய் பற்றாக்குறை காணப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற 330 மில்லியன் டொலரில் ஒரு பகுதியை அரச சேவையாளர்களுக்கு சம்பளம்இ சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதற்கும் ஒதுக்க திறைசேரிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்துக்குப் பின்னர் அரச செலவுகளை இயலுமான அளவு மட்டுப்படுத்திக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் 10 நிபந்தனைகள் பிரதானமானவையாக காணப்படுகிறது. இவற்றை தாராளமாக நடைமுறைப்படுத்தலாம். நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் நிர்வாக கட்டமைப்பு மறுசீரமைக்கப்படும் என்றார்.