பொலிஸாரை அச்சுறுத்திய அழகு நிலைய ஊழியர் கைது!

0
16

சந்தேக நபரை கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக அழகு நிலைய பெண் ஊழியர் (வயது 24) ஒருவர் கைது செய்யப்பட்டதாக வந்துரம்ப பொலிஸார்  தெரிவித்துள்ளதுள்ளனர்.

வந்துரம்ப பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்    அடிப்படையில் அதிகாரிகள் குழு வீட்டிற்குச் சென்றபோது, ​​சந்தேக நபர் தனது நண்பரின் (அழகு நிலைய பெண் ஊழியரின்) வீட்டில் இருந்ததாக வந்துரம்ப பொலிஸார் தெரிவித்துள்ளதுள்ளனர். இந்நிலையில், அங்குச் சென்றவோது சந்தேக நபரான அந்த பெண், அதிகாரிகள் மீது குற்றவியல் பலத்தை பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வௌ்ளிக்கிழமை (06) கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வந்துரம்ப  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.