அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றச் செயல்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பான சமூக மட்டத்தில்
உள்ள பல்வேறு தரப்பினருடனான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று மாலை கல்முனையில்நடைபெற்றது.
கல்முனை பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்
அலியும் விசேட அதிதியாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.லசந்த புத்திகவும்
கலந்து சிறப்பித்தனர்.
இக்கலந்துரையாடலில் பிரதான வளவாளராக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம்.றஸாட்
கலந்து கொண்டார்.
கலந்துரையாடலில் பிரதேச சமூக பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனைகள், சிவில் குற்றங்கள், முரண்பாடு, குடும்ப பிரச்சினைகள்
போன்ற பல்வேறுபட்ட தலைப்புக்களை அடிப்படையாக கொண்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச்செயலாளர் எம்.ஐ;.எம் ஜிப்ரி உட்பட பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் அதிபர்கள் மாணவர்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்