போத்தலில் தாக்கியதில் மாணவர் படுகாயம்

0
71
பாணந்துறையில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மேற்கொண்ட போத்தல் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.பாணந்துறை நல்லுருவ பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய மாணவர் ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.காயமடைந்த மாணவனின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் ஏனைய மாணவனை அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 12 வயதுக்குட்பட்ட மாணவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், எனவே எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.