போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 51 மின்சார சபை ஊழியர்கள் பணியில் இருந்து இடைநீக்கம்!

0
121

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 51 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் காசாளர் கருமபீடங்களில் பணியாற்றியவர்களே இவ்வாறு சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஊழியர்கள் நேற்று சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.