இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உலகத் தமிழர் பேரவை அழுத்தம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிகாரப் பகிர்வு வழங்கப்படாமல் இலங்கையில் எந்தவிதமான முதலீடுகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
உலகத் தமிழர் பேரவை அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கிறது.
அதிலிருந்து மீள்வதற்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த அமைப்புகள் தயாராக உள்ளன.
ஆனால், அதற்கு இலங்கையில் 70 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கின்ற இனப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
சரியான அதிகார பகிர்வின் அடிப்படையிலான தீர்வு எட்டப்படாமல், வடக்கு – கிழக்கில் மாத்திரமன்றி, இலங்கையில் எந்த பகுதியிலும் புலம்பெயர்ந்த அமைப்புகள் முதலீடுகளை மேற்கொள்ளப் போவதில்லை.
இதேநேரம் இலங்கையில் இடம்பெற்றவை என்று கூறப்படும் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கும் உலகத் தமிழர் பேரவை அழுத்தம் கொடுக்கும் என சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.