போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது!

0
2

மொரட்டுவை நகரில் போலி நாணயத்தாள்களுடன் 52 வயது பெண் ஒருவரை நேற்று (14) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேகநபரிடமிருந்து 10 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.

விசாரணையில், சந்தேகநபரின் வீட்டிலிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம், 25 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள், 08 போலி 1,000 ரூபாய் நாணயத்தாள்கள், ஒரு போலி 100 ரூபாய் நாணயத்தாள் மற்றும் 02 போலி 20 ரூபாய் நாணயத்தாள்கள் மீட்கப்பட்டன.

மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.