போலி மாணிக்கக்கல் விற்பனை!

0
85
உயர் பெறுமதியான மாணிக்கக்கல் என்று போலியான கல் ஒன்றை விற்பனை செய்ய தயாராகிய இருவரை ஆனமடுவ பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் ஆனமடுவ நகரிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு போலியான மாணிக்கக்கலை ஒரு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட வர்த்தகர் பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளார்.ஆனமடுவ பரமாகந்த கிராமத்தைச் சேர்ந்த 34 மற்றும் 38 வயதுடைய பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் ஆனமடுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.