நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கு பிரச்சினை நிலவுகின்ற நிலையில், பெருந்தோட்டப் பகுதிகளில் அது பாரிய பிரச்சினையாக உள்ளதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனம் குறைவாக உள்ள நிலையில், ஆயிரம் ரூபா வேதனமும் கிடைக்கவில்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் போஷாக்குப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு அவசியம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.