25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வெற்றியை சுவைத்தது நேபாளம்

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான ஐந்தாவது மகளிர் ரி20 கிரிக்கெட் அத்தியாயத்தின் முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொண்ட நேபாளம் 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தனது 3ஆவது அத்தியாயத்தில் விளையாடும் நேபாளம் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

2012, 2016 ஆகிய இரண்டு அத்தியாயங்களில் விளையாடிய நேபாளம் அவற்றில் தோல்விகளையே தழுவியிருந்தது. இன்றைய போட்டியில் அணித் தலைவி இந்து பர்மா பதிவுசெய்த 3 விக்கெட் குவியல், ஷம்ஜானா கத்கா குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன நேபாளத்தை இலகுவாக வெற்றிபெறவைத்தன.

ஐக்கிய அரபு இராச்சியம் சார்பாக  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட கவிஷா எகொடகே துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்ததுடன் குஷி ஷர்மா துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால், ஏனையவர்கள் பிரகாசிக்கத் தவறியமை ஐக்கிய அரபு இராச்சியத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.துடுப்பாட்டத்தில் குஷி ஷர்மா (36), கவிஷா எகொடகே (22) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் அணித் தலைவி இந்து பர்மா 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 16.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்ளைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. ஆரம்ப வீராங்கனை சம்ஜானா கத்கா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 45 பந்துகளில் 11 பவுண்டறிகள் அடங்கலாக 72 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார். 14 உதிரிகளே நேபாளத்தின் மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.ரூபினா சேத்ரி 10 ஓட்டங்களை பெற்றார்.பந்துவீச்சில் கவிஷா எகொடகே ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles