குறுக்கு வழிகளை உபயோகிக்காது மக்கள் ஆணையின் ஊடாக ஆட்சிக்கு வருவதே சிறந்த விடயமாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபராஜபக்க ஐந்து வருடங்கள் ஆட்சியை கொண்டு நடத்துவதற்காகவே மக்களால் தெரிவு செய்யப்பட்டார். ஆகவே அவருடைய மிகுதி ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யும் உரிமையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளது.
ஆகவே அவருக்கு தொடர்ந்தும் முன்னோக்கி பயணிக்க வேண்டுமாயின். தேர்தலுக்கு செல்ல வேண்டும். மக்கள் ஆணையின் ஊடாக ஆட்சிக்கு வர முடியும் அல்லவா . குறுக்கு வழிகளை உபயோகிக்காது மக்கள் ஆணையின் ஊடாக ஆட்சிக்கு வருவதே சிறந்த விடயமாக அமையும்.