மட்டக்களப்பில் அரசசேவையை பிரதிநிதித்துவப்படுத்தும்தொழிற்சங்கத்தினரால்வேலை நிறுத்த போராட்டம்

0
55

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தினரால் இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும்
சுகயீன விடுமுறை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
அஞ்சல், நில அளவையாளர், விவசாய ஒழுங்குமுறை, கிராம அலுவலர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.