மட்டக்களப்பில் இன்று சித்த ஆயுர்வேத பாதுகாப்பு சபை வலுவூட்டல் விழிப்புணர்வு நிகழ்வு

0
101

சுகாதார அமைச்சு, சுதேச வைத்திய பிரிவு, ஆயுர்வேத பாதுகாப்பு சபை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பன இணைந்து கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அனுசரணையில் சித்த ஆயுர்வேத பாதுகாப்பு சபை வலுவூட்டல் விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலக சுதேச வைத்திய அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாரம்பரிய உணவு கண்காட்சி விற்பனை, சித்த ஆயுர்வேத பாதுகாப்பு சபை வலுவூட்டல் விழிப்புணர் நிகழ்வு இடம்பெற்றதுடன் வைத்தியர்களுக்கான பயிற்சி பட்டறையும் இடம் பெற்றது.

நிகழ்வில் சுகாதார அமைப்பின் சுதேச வைத்திய பிரிவின் மேலதிக செயலாளர் சந்தன திலகரத்ன, சுதேச வைத்திய பிரிவின் பணிப்பாளர் தயானந்தன், கிழக்கு மாகாண பணிப்பாளர் ஜெயலட்சுமி பாஸ்கர், வைத்தியர்களான கிஷோர் லோஜன், வைத்தியர் சிவகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி பிரதேச செயலாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தற்களான வேணுகா, ஜெயபால் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.