நேற்று இரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு,இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பாடசாலை வீதியைச் சேர்ந்த, ராசநாயகன் ரமேஷ்குமார், என்ற 45 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .