‘வாய்ப்புக்களை உருவாக்குபவர்களே வெற்றியாளர்கள்’ தொனிப்பொருளில், மட்டக்களப்பு கல்விப்புலம்சார் உத்தியோகத்தர்களுக்கான ஊக்க உரையை, மலேசியா நாட்டைச் சேர்ந்த, சுய முன்னேற்றப் பேச்சாளர் எம்.கணேசன் இன்று நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பிரதான மண்டபத்தில், வலயக்கல்வி அலுவலக முறைசாரா கல்வி பிரிவின் ஏற்பாட்டில், உலக உளநல தினத்தை சிறப்பிக்கும்
வகையில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் செயலாளர் ஈஸ்வரராஜா, மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் ஹரிஹரராஜ், கல்வி நிர்வாக பிரதி கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ், கல்வி அபிவிருத்தி பிரதி கல்வி பணிப்பாளர் நிதர்சினி மகேந்திரகுமார் , திட்டமிடல் பிரதி கல்வி பணிப்பாளர் ஹரணியா சுபாகரன் மற்றும் உட்பட நிர்வாக உத்தியோகத்தர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்