மட்டக்களப்பில் காத்தான்குடி மற்றும் செங்கலடியில் இரத்ததானமுகாம் ஏற்பாடு

0
57

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு காத்தான்குடி முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் இன்று
முதியோர் இல்ல மண்டபத்தில் நடைபெற்றது.
மனிதாபிமான இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர். இளைஞர் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

இதேவேளை செங்கலடி புனித நிக்கொலஸ் ஆலயத்தால் இன்று ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்தான முகாம், அருட்தந்தை ஜோசப் நிகஸ்டன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், இரத்த வங்கிப் பிரிவினர், குருதி மாதிரிகளைச் சேகரித்தனர்.