27 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் பல துறைகளை ஒருங்கிணைத்து, ஐந்து வருட அபிவிருத்தித் திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள், மாவட்டத்தின் தேவைப்பாடுகள் உட்பட அனைத்து விடயங்களும் அடங்கிய ஐந்து ஆண்டு திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையின் கீழ் யு.என்.டி.பி.யின் நிதியுதவியுடன் இந்த ஐந்து வருட திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்து திட்டங்களை உள்ளடக்கியதாக ஐந்துவருட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
விவசாயம்,கால்நடை,மீன்பிடி உட்பட உற்பத்தி துறை சார்ந்த திட்டங்களை உள்ளடக்கியதாகவும் நீர்பாசனம்,வீதி புனரமைப்பு உட்பட பல விடயங்களை
உள்ளடக்கியதான உட்கட்டுமான திட்டங்கள்,சேவைதுறைகள் உட்பட பல்வேறு துறைகளின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக
பல்வேறு விடயங்கள் இந்த ஐந்தாண்டு திட்ட நூலில் உள்வாங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் காணப்படும் வளங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான முதலீடுகளைப்பெற்று தொழில்துறைகளை முன்னேற்ற நிலைக்கு கொண்டுசென்று ஏற்றுமதி துறையினை அதிகரித்தல் மற்றும் வேலைவாய்ப்புத்துறையினை அதிகரித்தல் உட்பட பல்வேறு திட்டங்கள் இதன்மூலம் முன்மொழியப்பட்டுள்ளன.

அங்குரார்ப்பண நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவுக்குரிய மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன்,
மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன், யு.என்.டி.பி. மாவட்ட திட்ட பணிப்பாளர் பார்த்தீபன் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின்
தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தின் அனைத்து துறைகளும் ஆய்வுசெய்யப்பட்டு இந்த திட்டம் இலங்கையின் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தல்,வெளிநாட்டு முதலீடுகளைப்பெற்றுக்கொள்ளல் ஊடாக செயற்படுத்துவதற்கும் அதனை ஆறு மாதகாலத்திற்கு ஓருமுறை ஆய்வுசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles