பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறை மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மக்களை விழிப்பூட்டும் பல்வேறு செயற்பாடுகள் அரசு அரச சார்பற்ற நிறுவனங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கமைவாக மட்டக்களப்பு சேர்கிள் இளம் பெண்கள் அமைப்பினால் பாலியல் பாலின அடிப்படையிலான வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் போதைப் பழக்கம், தொலைபேசிகளின் ஊடாக ஏற்படுத்தப்படும் குற்றங்களை தடுப்பது தொடர்பாக மக்களை விழிப்பூட்டும் வீதி நாடகம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
விழிப்புணர்வு வீதி நாடகத்தை பார்வையிடுவதற்காக ஏராளமான கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். நாடகத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட குறிப்பிடப்பட்ட செயற்பாடுகள் தமது கிராமத்தில் இடம் பெற்று வருவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.