28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பில் தொடர்ந்து மழைபெய்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 64.6மில்லி லீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் தொடந்தும் மழைபெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி சுப்ரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மட்டக்களப்பின் பிரதான குளங்களான உன்னிச்சை, நவகிரி, புலுக்குணாவ, கித்துள் ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
உன்னிச்சைகுளத்தின் மூன்று வான் கதவுகள் இரண்டு அடியும் நவகிரி குளத்தின் இரண்டு வான் கதவுகள் சுமார் ஐந்து அடிகள் திறக்கப்பட்டுள்ளதுடன் ரூகம் குளத்தின் இரண்டு வான் கதவுகள் ஆறு அடிகள் திறக்கப்பட்டுள்ளன.
நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மண்டூர் –வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதை, மண்டூர்-இராணமடு பிரதான போக்குவரத்துப்பாதை ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
இதேபோன்று உன்னிச்சைகுளம் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக வவுணதீவு பகுதியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூகம் மற்றும் கித்துள் குளங்கள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை காணப்படுகின்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை தமது அலுவலக கடமைக்கு செல்லும் வகையில் வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதியில் பல இடங்களில் வீதியின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் உழவு இயந்திரங்கள் ஊடாக உத்தியோகத்தர்களை அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் கௌரிபாலன் தலைமையில் இது தொடர்பான நடவடிக்கைகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles