மட்டக்களப்பில் போயா தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை: பெண் கைது!

0
15

போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டார். 

புன்னைச்சோலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனை அடுத்து, பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் கே.ஜி.எஸ். சஞ்ஜீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர், குறித்த வீட்டில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, அந்த வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 60 கால் போத்தல்கள் கொண்ட மதுபானங்களும், விற்பனையின் மூலம் பெறப்பட்ட ரூபா 4,490 பணமும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட குறித்த பெண், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.