மட்டக்களப்பில் வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும்

0
107

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியையும் விற்பனை சந்தையையும் இன்று ஆரம்பித்தன.

கிராம மட்ட தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் அரசாங்கம் பல்வேறு உதவி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்முகமாக உற்பத்தி கண்காட்சி நடாத்தப்படுகின்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான திருமதி பிரசாந்தன், திருமதி சுதா சதாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெருமளவான மக்கள் பொருட்களை ஆர்வமுடன் கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.