கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, கனடா கல்வி அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட அறம் அமைப்புடன் இணைந்து,
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 1982ம் ஆண்டு உயர்;தரப் பிரிவு மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
கனடா கல்வி அமைப்பின் கிழக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்கான இணைப்பாளர் தயாபரன் தலைமையில், மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில்,
வறுமைக்கோட்டில் வாழும் மட்டக்களப்பு ,அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்
வழங்கப்பட்டன.
நிகழ்வில் வலய கல்வி பணிப்பாளர்கள், யாழ் இந்து கல்லூரியின் 1982ம் ஆண்டு உயர் தர பழைய மாணவர்கள், பாடசாலை அதிபர்கள்,பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர் .