மட்டக்களப்பில் 340வது நாளாக நியாய தொடர் நடைபயணம்

0
157

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து சுழற்சி முறையில் முன்னெடுத்துள்ள ,
மக்களுக்கான நியாய தொடர் நடைப்பயணம் இன்று 340 வது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

‘அமைதிக்காக, நீதிக்காக நடக்கின்றோம் ‘ எனும் தொனிப்பொருளில் நடைபவனி இடம்பெற்றது. ஜனநாயகத்திற்கான நியாய தொடர் நடைபயணமானது, கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா வரை பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபவனி இடம்பெற்றது.

நடைபயணத்தில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவும் கலந்து கொண்டார்.