28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொவிட் தொற்று மூன்றாம் அலை காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர்ச்சியான பயணத்தடையால் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 25 சமுர்த்தி வங்கிகள் ஊடாக சமுர்த்தி பயனாளிகள் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியந்தீவு சமுர்த்தி வங்கி வலயத்திற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், வாங்கி முகாமையாளர், வங்கி வலய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles