மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி வழிபாடுகள்

0
132

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட பூசைகள்
சிறப்பாக நடைபெற்றது.
மகா சிவராத்திரி விஷேட பூசைகளை சிவஸ்ரீ தியாகராஜ கமலராஜ குருக்கள் நடாத்தினார்.
இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்துடன் இணைந்து
தெய்வீக இசை மற்றும் கலாசார நிகழ்வுகளை நடாத்தியது.
நான்கு ஜாம பூசைகளிலும் மட்டக்களப்பு நகரிலும் நகருக்கு வெளியிலிருந்தும் பெருமளவான பக்தர்கள்
கலந்துகொண்டனர்.
இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் கே.மகேசன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன மற்றும் தேசிய இளைஞர்
சேவைகள் மன்ற பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர், ஆலய வண்ணக்கு சபையினர் உட்பட பெருந்திரளாவனர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.