29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயவருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்ற நிகழ்விற்கான, கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது. வீரகத்திப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ முரசொலிமாறன் குருக்களினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு கொடி மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியூடாக கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.
நாளை நண்பகல் 12.00மணியளவில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles