மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை ஆலய திருவிழா முன்னேற்பாட்டுக் கூட்டம்

0
66

மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா, எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், திருவிழா முன்னேற்பாட்டுக் கூட்டம் இன்று மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நடைபெற்றது.


எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகும் அன்னையில் திருவிழா, செப்டம்பர் மாதம் 8ம் திகதி நிறைவுபெறவுள்ளது.முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகையின் ஆலோசனைக்கு அமைய மாவட்டச் செயலாளர் ஐஸ்ரினா முரளிதரன் தiலைமயில் நடைபெற்றது. திருவிழாவிற்கு வருகை தருவோரின் பாதுகாப்பு, தங்குமிடம், உணவு, குடிநீர் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.


வவுணதீவு பிரதேச செயலாளர் சத்தியானந்தி, ,மாவட்ட செயலக கிறிஸ்தவ சமய உத்தியோகத்தர் ரேகா நிருபன், ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல பங்கு தந்தை மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், மண்முனை மேற்கு பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மின்சார சபையினர், மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் சாலை உத்தியோகத்தர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள்,
கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக பாதை யாத்திரை குழுவினர், அருட்தந்தையர்கள் என பலரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்