மட்டக்களப்பு ஆரையம்பதி சிகரம் சேர் ராசிக் பரீட் வித்தியாலயத்திற்கு நிரந்தர கட்டடம் தேவை!

0
172

மட்டக்களப்பு ஆரையம்பதி சிகரம் சேர் ராசிக் பரீட் வித்தியாலயத்திற்கு நிரந்தர கட்டடம் இன்மையால், பாடசாலை மாணவர்களும் கற்பிக்கும
ஆசிரியர்களும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் அனுமதியுடன் மாகாண கல்வி திணைக்களத்தின் கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில்
காத்தான்குடி கல்வி கோட்டத்தில் ஒரு ஆரம்ப பாடசாலையாக இப் பாடசாலை இயங்கி வருகிறது.
அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இரண்டு கடைகளுக்குள்ளும், தகரக் கொட்டிலுக்குள்ளும் பாடசாலை இயங்குவதை
காணக் கூடியதாகஉள்ளது.
இன நல்லுறவுப் பாலமாக திகழும் இந்தப் பாடசாலைக்கு, நிரந்தர கட்டத்தையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தருமாறு
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.