மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

0
9

தூய்மையான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை, பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கொண்டுசெல்லும் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இன்று காலை கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், பாரிய சிரமதான செயற்பாடுகள் இடம்பெற்றன.


கல்லூரியின் அதிபர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற சிரமதான பணியில், ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


பாடசாலையின் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக இருந்த பகுதிகளும் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டன. பாடசாலையினை சூழவுள்ள பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் கழிவுப்பொருட்களும் சுற்றுச்சூழலில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களும் கற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.