மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு முன்பள்ளி சிறார்களின் ஒளி விழா சிறப்பாக இடம்பெற்றது.

0
158

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு முன்பள்ளி சிறார்களின் 2023ஆம் ஆண்டுக்காக்கான ஒளி விழா நிகழ்வுகள் இன்று
சிறப்பாக இடம்பெற்றன.
முன்பள்ளி ஆசிரியர்களின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி சங்க பொருளாளர் விஷ்ணு காந்தன் தலைமையில் நிகழ்வு
நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் சிறார்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு கிராம அபிவிருத்தி சங்க பிரதான மண்டபத்திற்கு
அழைத்து வரப்பட்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
சிறார்களின் ஒளி விழா சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எந்திரி என் சிவலிங்கம், கிராம சேவை உத்தியோகத்தர் சுகந்தினி
ஜெகதர்சன்,மற்றும் இருதயபுரம் மேற்கு முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிறார்களின் பெற்றோர் , என பலர் கலந்துகொண்டனர்.