மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

0
218

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்த மழை காரணமாக, உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேச விவசாய நிலங்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமை காணப்படுவதால், மக்களை அவதானமாக இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
உன்னிச்சை குளம் திறக்கப்பட்டுள்ளமையினால் வவுணதீவு ஆயித்தியமலை பிரதான விதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.