ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்று மாலை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
ஏறாவூர் வாவிக்கரை மைதானத்தில் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசார்ட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான்,எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட பலரும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.